பட்டப்பெயர் என்பது,நாம்பட்டம் வாங்கியதால் வருவதில்லை!
மற்றவர் பார்வையில்நமது நடவடிக்கைகள்நமக்குத் தரும் காரணப்பெயரே அது!
அதுதான்நமக்கு நாமேபோட்டுக்கொள்ளும்உண்மையானமதிப்பெண்!
பக்கத்து ஊரில் ஒருவர்மளிகைக்கடை வைத்திருந்தார்!
கருமி கருப்பையா கடை என்றால் எல்லோருக்கும் பளிச்சென்று தெரியும்!
வெளியூர் செல்லும்போதுமகனை மட்டுமே கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லுவார்!
போகும்போது சிக்கனமாகவே இருக்கவேண்டும் என்றுபலமுறை சொல்லுவார்!
அப்பாவிடம் பாராட்டுப்பெறவேண்டும் என்பதற்காக லாரியில் வந்த பத்து மிளகாய் மூட்டைகளையும் மகனே இறக்கிவிட்டுக் கையைக் கழுவி ரசம் வைக்கச் சொன்னான்!
கானா ரூனா வந்ததும்மனைவி மகனின் கருமித்தனத்தால்தான் இன்றைக்குச் செலவே இல்லாமல் ரசம் வைத்தேன் என்று வெகுவாகப் புகழ்ந்தாள்!
கானா ரூனா மகனைப்பக்கத்தில் கூப்பிட்டார்!
பாராட்டப்போகிறார் எனநினைத்தவனுக்குப் பளார் என்று ஒரு அறை விழுந்தது!
“பாடாவதிப் பயலே!பத்து விரலையும் ஏன்டாஒரே நாள்ல கழுவினே?ஒருநாளைக்கு ஒரு விரல் வீதம் கழுவினா,பத்து நாளைக்கு ரசம் வைச்சிருக்கலாமேடா!”என்றார்!
இதனால் அவரைக்கஞ்சப்பிசுநாறி என்றுசொன்னாலும், அது அதிக நீளமென்று அறைந்துவிடுவாரோ என்றுதான் கருமி என்றுசுருக்கமாகப் புகழ்கின்றனர்!!!
பின் குறிப்பு
இன்றுஉலக நகைச்சுவையாளர்தினம்!
யாரும் நம்மைக்காமெடி பீஸ் ஆக்கீடாமத்தாராளப் பிரபுவாவேஇருங்க!!!
MakeYourMARK !!!
Leave a comment